என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சேலம் கொலை
நீங்கள் தேடியது "சேலம் கொலை"
சேலத்தில் கோவில் பூசாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சுக்கம்பட்டி, வலசையூர் காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சுந்தர்ராஜன் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். பிரியா திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.
பாஸ்கர் நெசவு தொழில் செய்து வந்தார். மேலும் இவர் வீட்டின் எதிரே சிறிய காளியம்மன் கோவில் ஒன்றை கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி சென்ற பாஸ்கர் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி பத்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் பாஸ்கரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் அருகில் இருக்கும் காலி இடத்தில் பாஸ்கர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கழுத்து பகுதியில் சுமார் 4 சென்டி மீட்டர் அளவுக்கு அறுக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீராணம் போலீசாருக்கும், அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே பத்மா மற்றும் அவரது உறவினர்களும், வீராணம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் பாஸ்கரை கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அங்கு கொலையுண்டு கிடந்த தனது கணவர் உடலை பார்த்து பத்மா கதறி அழுதார். இதனை தொடர்ந்து போலீசார் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தபோது பாஸ்கருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, நல்ல மனிதர் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பத்மா மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பாஸ்கர் வெளியே போயி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். எங்கே போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. எனவே இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றனர்.
மேலும் போலீசார் விசாரிக்கையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
சுந்தர்ராஜன் காலனியில் பாஸ்கர் மற்றும் அப்பகுதி மக்கள் எல்லோரும் சேர்ந்து காளியம்மன் கோவிலை கட்டியுள்ளனர். பின்னர் நாளடைவில் பொதுமக்கள் கோவில் நிர்வாக பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தனர்.
மேலும் பாஸ்கர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தார். சீட்டு ஒரு மாதம் உறுப்பினர்களால் கட்ட முடியவில்லை என்றாலும் அவர்களிடம் பணத்தை கொடுங்கள் என்று நிர்பந்திக்க மாட்டார். மறுமாதம் அந்த பணத்தை சேர்த்து வாங்குவார்.
இந்த சீட்டில் வரும் லாபத்தை கொண்டு, கோவிலில் திருவிழாவும் நடத்தி வந்தார். இது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பொதுமக்களிடம் பணம் பிரித்து கோவில் கட்டியதால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சீட்டு பணம் கட்டுவதில் பெண்களிடம் பேசுவார். இது தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி பாஸ்கர் சம்பவத்தன்று இரவு எதற்காக வெளியே சென்றார்? அவரை வெளியே வருமாறு அழைத்தவர்கள் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக தொழிலாளியை உறவினர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 50). இவர் மாதையன் குட்டையில் உள்ள கனிமவளத்துறை குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மயில்சாமிக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் கோபம் அடைந்த உறவினர்கள் மரக்கட்டையால் மயல்சாமியின் தலையில் ஓங்கி அடித்தனர். மேலும் இடுப்பு, கை, கால்களையும் அடித்து உதைத்தனர். இதில் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மயில்சாமிக்கு சொந்தமாக ஆடுகள், மாடுகள் மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உறவினர்கள் வளர்த்து வரும் கால்நடைகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி, நிலம் தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே மயில்சாமி அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையில் 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்கள் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தப்பி ஓடி விட்டனர். கொளத்தூர் அருகே உள்ள பாலாற்றை தாண்டினால் கர்நாடக மாநில எல்லை வந்து விடும். மலைகள் சூழ்ந்துள்ள இந்த எல்லையில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. அதுபோல் காவிரி ஆற்றின் மறுகரைக்கு சென்றால் தர்மபுரி மாவட்டம் வந்து விடும். இந்த எல்லைப் பகுதிகளில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மயில்சாமி ஏற்கனவே இதய நோயால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டார்களே? என உறவினர்கள் கதறி அழுதனர். மயில்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டுள்ளனர்.

×

X